டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் கருணையே இல்லாமல் செயல்பட்டிருந்ததால் விதிக்கப்பட்ட தண்டனைக்கு கருணைகாட்டவில்லை. அதனால் மார்ச் 20 ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் நிர்பயாவைப் போலவே தங்கள் குழந்தை பறிகொடுத்த புதுக்கோட்டை பள்ளி மாணவி அபர்ணாவின் பெற்றோர் எங்கள் குழந்தையை கொன்றவர்களுக்கு தண்டனையே இல்லையா என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவடடம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கலைக்குமார். மனைவியும் அரசுப் பள்ளி ஆசிரியை. இவர்களின் இரண்டாவது குழந்தை அபர்ணா (15) தனியார்பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார். பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் 2011 ம் ஆண்டு மார்ச் 9 ந் தேதி காலை பள்ளிக்கு தேர்வு எழுத செல்ல தயாராகிக் கொண்டிருந்த மாணவி அபர்ணாவை வீட்டுக்குள் நுழைந்த கயவர்கள் சின்னாபின்னமாக்கி கொன்றதுடன் நகைகளையும் அள்ளிக் கொண்டு சிறுமியை தூக்கில் தொங்கவிட்டு சென்றனர். இவற்றை எல்லாம் 5 வயது அபர்ணாவின் தம்பி பார்த்துக் கொண்டிருந்தான்.
பெற்றோருடன் போலீசாரும் வந்து தடயங்களை சேகரித்தனர். சிலரிடம் விசாரணையும் செய்தனர். குற்றவாளிகளை சிறுவன் அடையாளம் காட்டினான். பெரிய தண்டனை கிடைக்கும் என்று காத்திருந்தனர். ஆனால் வழக்கின் போக்கு சரியில்லை என்பதை அறிந்த கலைக்குமார் நீதிமன்றத்தை நாடினார் அதனால் சிபி சிஐடி விசாரணை கிடைத்தது. தொடர்ந்து சிபிஐ விசாரணை என 9 ஆண்டுகள் ஓடிவிட்டது. கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் எங்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பதில் சொல்லி தங்கள் இயலாமையை காட்டினார்கள்.
6 முறை மறைந்த மாஜி முதல்வர் ஜெ.விடமே மனு கொடுத்தும் நீதி கிடைக்கவில்லை. 16 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்துள்ளனர். நீதி கிடைக்கவில்லை என்றபதால் அரசும் காவல்துறையும் ஒரு கோடி இழப்பீடு கேட்டு மண்டும் நதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் தான் டெல்லி மாணவி நிர்பயா கொலையாளிகளின் தூக்கு தண்டனை அபர்ணாவை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நீதி கிடைக்கும் என்று நீதிமன்றத்தையும் முதலமைச்சர் ஜெ உள்பட பலரையும் நாடினோம் நீதி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் உள்ளனர். இந்த நிலையில் டெல்லி சம்பத்தைப் பார்த்து எங்களுஙக்கு நீதி கிடைக்கலயே என்று கண்கலங்கி வருகின்றனர்.