Skip to main content

நீலகிரியில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள்!

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

நீலகிரி மலையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட ஓவியங்கள் இந்த பாறை ஓவியங்களில் முக்கியமாக காணப்படுகின்றன.
 

nilagiris



பாதுகாக்கப்பட்ட பகுதியான இங்கு சட்டவிரோதமாக மலையேறுபவர்கள், டூரிஸ்ட்டுகள், சமூகவிரோதிகள் ஏராளமாக வருகிறார்கள். அவர்கள் இந்த பாறை ஓவியங்களின் முக்கியத்துவம் அறியாமல் தங்களுடைய பெயர்களையும், கட்சி சின்னங்கள், மத அடையாளங்களை வரைந்து செல்கிறார்கள்.

தொல்லியல் துறையாவது இந்த ஓவியங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஓவியங்கள் நீலகிரியில் வாழும் இருளர்களின் பூர்வீகத்தை உறுதிசெய்வதாகவும், அவர்களுடைய மூதாதையரே இந்த ஓவியங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஓவியங்கள் நாங்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை எங்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றன. இந்த நிலத்துடன் எங்களுக்குள்ள உறவை நினைவூட்டுகின்றன. நீலகிரி வனப்பகுதியை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை எங்களுக்கு உணர்த்துகின்றன என்று கரிக்கியூர் மலைக் கிராமத்தின் மூத்த தலைவர் பத்ரன் கூறுகிறார்.

தமிழன் உலகின் மூத்தகுடி என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது. அவன் தனது தொன்மையின் அடையாளங்களை பாதுகாக்கவும் முன்வர வேண்டும் என்று தொல்லியல் துறையினர் கூறுகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்