நெய்வேலி போக்குவரத்து கழக தொழிலாளர்கள, கிளை மேலாளரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
நெய்வேலி டவுன்ஷிப் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், கிளை மேலாளரின் நடவடிக்கையை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ரவீந்திரராஜ் மற்றும் போலீசார் சென்று சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து நெய்வேலி டவுன்ஷிப் அரசு போக்குவரத்து கழக தொமுச, பாமக, சிஐடியு, தேமுதிக ஆகிய தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரளித்தனர்.
அப்புகாரில் நெய்வேலி டவுன்ஷிப் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர், எந்த பேருந்தும் அதற்க்கான வழித்தடத்தில் இயங்காமல் வழித்தடத்தை மாற்றம் செய்து அதிகமான கிலோ மீட்டர் உள்ள வேறு வழி தடங்களில் இயக்கும்படி கட்டாயப்படுத்துவதாகவும், தொழிலாளர்கள் தங்களுக்கு உண்டான விடுப்பை தங்களின் அவசர தேவைக்கு எடுத்தாலும், அவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு சம்பளத்தில் பிடித்தம் செய்தும், பணியில் உள்ள தொழிலாளர்களை இரவு நேரத்தில் கவுன்சலிங் என்ற பெயரில் தூங்க விடாமலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் கூறியுள்ளனர்
- சுந்தரபாண்டியன்