Published on 03/05/2018 | Edited on 04/05/2018

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மிகச்சிறப்பாக புதிய பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்ததுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
நாளை 4 ந்தேதி 1, 6, 9, 11 ஆம் வகுப்பு புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிடப்போகும் சூழலில்...நான்கு நாட்களுக்கு முன்பே பல்வேறு கல்வி இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைவிட முக்கியமானது, அப்புதிய புத்தகங்களில் பல பிழைகள், குறைபாடுகள் உள்ளன என்ற சர்ச்சைக் குற்றச்சாட்டுகளும் கிளம்பியிருக்கின்றன.