Published on 05/12/2018 | Edited on 05/12/2018
மழை பெய்ய ஆரம்பித்தாலே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என பள்ளி கல்வித்துறை செயலர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்விதுறை சார்பாக உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மழை வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும். மழையால் பாதிக்கப்படும் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்படவேண்டும். அப்படி அறிவிக்கப்படும் விடுமுறை காரணமாக பாடத்திட்டம் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும். சாதாரண மழைக்கெல்லாம் விடுமுறை அளிக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.