மாதிரி படம்
தமிழகம், கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான ரயில் பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட உள்ளன.
இந்தியாவிலேயே முதல் முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சாத்தியக் கூறுகள் அறிக்கையைத் தயாரிக்கும் பணிக்கான டெண்டர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம், கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சாத்தியக் கூறுகள் அறிக்கையை தயாரிக்கும் பணி தொடங்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஓசூர் - கர்நாடகாவின் பொம்மசந்திரா இடையே பெருந்திரள் போக்குவரத்து முறையை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அறிக்கையைத் தயாரிக்கும் பணிக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஓசூர் 20.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த வழித்தடமானது கர்நாடக மாநிலத்தில் 11.7 கி.மீ. நீளமும், தமிழகத்தில் 8.8 கி.மீ. நீளமும் உள்ள வகையில் தமிழகம், கர்நாடகா இடையே புதிய மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன.