மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையின்படி இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்போடு இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மனித கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சம்மந்தமான பயிலரங்க நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தி உள்ளது.
மனித கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழில்முறையை ஒழிப்பதற்காக மாவட்ட அளவில் தனி குழு அமைக்கவும் அக்குழுவில் வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் என பல்வேறு துறையினர் இணைந்து செயல்படும் வகையில் இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி வேலூர் ஒருங்கிணைத்த நிதீமன்ற கட்டிடம், மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி தலைமையில், அதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதியதாக அமைக்கப்பட்ட குழுவை அறிமுகப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் கனகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப்ரவேஷ் குமார், மாவட்ட முதன்மை சார்பு நீதிபதி ராஜா, தலைவர் மாவட்ட நீதிபதி நிரந்தர மக்கள் நீதிமன்றம் குணசேகர் மற்றும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணை இயக்குநர் தேவசித்தம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்தக்குழு மனித கடத்தல் மற்றும் கொத்தடிமை ஒழிப்பிற்காக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்தடிமை ஒழிப்பில் தமிழகம் முன்நிலை மாநிலமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குழு மூலமாக கடத்தல் மற்றும் கொத்தடிமை தனத்தை முற்றிலும் ஒழிக்கும் எனச்சொல்லப்பட்டது.