Skip to main content

சென்னை மாநகர பேருந்துகளில் புதிய வசதி!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
New facility in Chennai city buses

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது.  இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார்.

இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த ஜனவரி 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கிளம்பாக்கத்திலிருந்து (KCBT) இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் பயணிகளின் வசதிகளுக்காக பயணிகள் தங்களின் உடைமைகளை எளிதாக வைத்துக் கொள்ள ஏதுவாக முன் மற்றும் பின் படிக்கட்டுகளுக்கு அருகே உள்ள இரண்டு இருக்கைகள் அகற்றப்பட்டுள்ளன. போக்குவரத்துக் கழகத்தின் இந்த செயல் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

சார்ந்த செய்திகள்