Skip to main content

நெல்லை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக பெருந்தமனி மாற்று ரத்த நாள அறுவை சிகிச்சையில் வெற்றி

Published on 02/02/2020 | Edited on 02/02/2020

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசு பல்நோக்கு உயர் மருத்துவமனையின் இரத்த நாள அறுவை சிகிச்சை துறையில் சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களின் உள்ள அரசு மருத்துமனைகளில் மட்டுமே செய்யக்கூடிய பெருந்தமனி (Aorta) அறுவை சிகிச்சைகள், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

 

nellai Government Hospital for the first time succeeding in atherosclerosis


தூத்துக்குடியை சேர்ந்த 60 வயதுடைய சக்தி ஆனந்தம் கூலித் தொழிலாளி. வயிற்று வலி என்று பல மருத்துவமனைகளை அணுகியும் குணமடையாமல் இரண்டு மாதங்களாக அவதிப்பட்டார். பல மருத்துவமனைக்கு சென்றும் குணமாகவில்லை. பின்னர் இங்கு இரத்த நாள இறுவை சிகிச்சை பிரிவில் வயிற்று வலிக்காக காட்டிய போது இருதயத்திலிருந்து வயிற்றுக்கு வரும் பெருந்தமனியும் (Aorta) மற்றும் அதில் இரண்டாக பிரிந்து கால்களுக்கு செல்லும் இரத்த நாளங்களும், வீங்கிய நிலையில் எந்த நேரத்திலும் வெடித்து உயிருக்கு ஆபத்து நேரிடும் (Abdominal Aorta with Bilateral IIiac Aneurysm) எனவும் மருத்துவர் கூறி மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். ஆய்வுகளுக்கு பின்னர் நோயின் ஆபத்தை உணர்ந்து அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டது. அவரைப் பரிசோதித்த ரத்த நாளத் துறை தலைவர் டாக்டர் இளஞ்சேரலாதன் தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். மேலும் இவ்வகை அறுவை சிகிச்சையில் உயிருக்கு ஆபத்து உள்ளது எனக்கூறி வெடிக்கும் நிலையில் உள்ள பெருந்தமனி (Aorta) மற்றும் கால்களுக்கு செல்லும் இரத்தக்குழாய் முழுவதையும் அகற்றி விட்டு செயற்கை இரத்தக்குழாய் பொருத்தி வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நோயளி பூரணமாக குணமடைந்து வீட்டிற்கு செல்லும் தருவாயில் உள்ளார்.

 

nellai Government Hospital for the first time succeeding in atherosclerosis

 

ஆய்க்குடியை சேர்ந்த 46 வயது ஆகிய மைக்கேல் அந்தோணி சிகரெட் பழக்கம் மற்றும் அதிக கொழுப்பு சத்து நோய் மூலம் பாதிக்கப்பட்டு இடது காலுக்கு செல்லும் பெரிய நாளம் (Aortic With lefr lliac occlusion) அடைப்பு ஏற்பட்டு இடது காலில் புண் ஏற்பட்டு இரத்த ஒட்டக்குறைவால் நடக்க இயலாமல் காலை அகற்றும் நிலையில் இரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவை அணுகினார். அவரை பல ஆய்வுகளுக்கு உட்படுத்தி (CT Angiogram) அந்த அடைப்பை தாண்டி செயற்கை இரத்தகுழாய் பொருத்தப்பட்டு (Bye Pass) இரத்த ஒட்டம் சீரமைக்கப்பட்டு காலில் புண் ஆறிய பிறகு கால் வலி இல்லாமல் நன்றாக நடக்கும் நிலையில் வேலைக்கு திரும்பினார்.

இது போன்ற பெரிய ஆபத்தான பெருதமனியில் செயற்கை இரத்தக்குழாய் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் தனியார் மருத்துவமனையில் 5 இலட்சம் முதல் 10 இலட்ம் வரை செலவாகும் நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள இரத்த நாளத்துறையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்படுகின்றன.

இந்த அறுவை சிகிச்சைகள் நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.M.இரவிச்சந்திரன்.M.D. அவர்களின் வழிகாட்டுதலின் படி வெற்றிகரமாக நெல்லை மாவட்டத்திலேயே முதல் முறையாக செய்யப்பட்டன.

மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.M.இரவிச்சந்திரன்.M.D., சொல்லுவது  இத்தகைய கடினமாக அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்த இரத்தநாளத்துறை தலைவர் பேராசிரியர் மரு.க.இளஞ்சேரலாதன் மற்றும் இருதய அறுவைச் சிகிச்சைத்துறைத் தலைவர் பேராசிரியர் மரு.ரா.சஞ்சீவ் பாண்டியன் அவர்களையும் மயக்கவியல் துறை தலைவர் பேராசிரியர் மரு.அமுதாராணி மற்றும் இணை பேராசிரியர் மரு.மனோரம்மா, துணைப் போராசிரியர்கள் மரு.ஜானகி, மரு.முத்துராஜ், செவிலியர்கள் திருமதி.மைக்கேல் சந்தியா, திருமதி.அருணாதேவி ஆகியோர் தலைமையில் இங்கு முதன் முதலாக பெருந்தமனி மாற்று ரத்த நாள அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர். பாராட்டுகளை என்றவர் இது நாடடிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்