Published on 29/11/2018 | Edited on 29/11/2018
பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 25 வயது வரை மட்டுமே நீட் எழுத முன்பு அனுமதிக்கப்பட்டனர். தற்போது பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர்களும் 30 வயதுவரை தேர்வு எழுத இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. வயது வரம்பு தளர்வுக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம். இடஒதுக்கீடு பிரிவினர் 30 வயதுவரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர், தற்போது பொதுபிரிவைச் சேர்ந்த மாணவர்களும் 30 வயதுவரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு இடைக்கால உத்தரவுதான், வயது தளர்வு என்பது இறுதி தீர்ப்பை பொறுத்துதான் அமையும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.