Skip to main content

கமல்ஹாசனுடன் இணைந்து செயல்பட தயார் - பொன்னுசாமி

Published on 08/11/2018 | Edited on 08/11/2018
kamal



"மக்கள் நீதி மய்யம்" தலைவர் கமல்ஹாசனை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனரும் மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி தலைமையில் மாநில பொருளாளர் எஸ்.பொன்மாரியப்பன், மாநில துணைத் தலைவர் ஆவின் எஸ்.முருகன், மாநில இணைச் செயலாளர்கள் எஸ்.வெங்கடேசபெருமாள், பொன்னேரி எஸ்.எம்.குமார், எம்.சக்திவேல் மற்றும் பாலாஜி, பிரசாத் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் 07.11.2018 மதியம் 12.15மணியளவில் நேரில் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
 

இந்த சந்திப்பின்போது, தற்போதைய சுகாதாரமற்ற அரசியல் சூழலில் மாற்றத்தை கொண்டு வர நாகரீகமான, சுகாதாரமான அரசியலை முன்னெடுத்து வரும் மக்கள் நீதி மய்யத்தோடு இணைந்து பயணிக்க தயார் என்று பொன்னுசாமி கூறினார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்