Skip to main content

தேர்வு அறையில் மகன் - பிணவறையில் தந்தை - நீட் தந்த கொடூரம்

Published on 06/05/2018 | Edited on 07/05/2018

 

kasturi mahalingam 002.jpg


திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம் விளக்குடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் ( எ) கிருஷ்ணசாமி (47). பெருகவாழ்ந்தான் கிராமத்தில் உள்ள நூலகத்தில் நூலகராக உள்ளார். இவரது மனைவி மாற்றுத்திறனாளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகன் கஸ்தூரி மகாலிங்கம் மருத்துவர் ஆக வேண்டும் கனவுடன் சிறப்பு பயிற்சியும் பெற்ற நிலையில், அவருக்கு கேரளாவில் தேர்வு மையம் போடப்பட்டிருந்தது. நீண்ட தூரம் பயணித்து தேர்வு எழுத வேண்டுமே என்ற மன அழுத்தத்துடன் தந்தையும் மகனும் புறப்பட்டுச் சென்றார்கள். 
 

இன்று காலை தேர்வு மையத்தின் வாசல் வரை சென்று கை அசைத்து வழி அனுப்பினார். பின்னர் தாங்கள் தங்கியிருந்த விடுதி அறைக்கு வந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் அருகில் உள்ள சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 

எத்தனை சிரமங்கள் வந்தாலும் மகனை மருத்துவராக்க வேண்டும் என மன அழுத்தத்துடன் சென்ற தந்தை இறந்தது கூட தெரியாமல் மகன் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறான்.  இந்த பாழாப்போன நீட்டுக்காக எத்தனை உயிர்களை குடிக்க போகிறது இந்த அரசாங்கம் என்று குமுறி அழுகிறார்கள் உறவினர்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்