Skip to main content

நெடுவாசல், வடகாடு கிராம மக்கள் மே தின தீர்மானம்!

Published on 30/04/2018 | Edited on 30/04/2018
neduvasal

  

நெடுவாசல், வடகாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மே தின கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாளில் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல், வடகாடு, கருகாக்குறிச்சி, சேந்தன்குடி மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களில் நடந்த கிராம சபை கூட்டத்தில், 'நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்ப்பன் திட்டம் செயல்படுத்தக் கூடாது. அந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கருக்காக்குறிச்சி, வானக்கண்காடு, கோட்டைக்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒ.என்.ஜி.சி. எண்ணை ஆழ்குழாய் கிணறுகளை அப்புறப்படுத்த வேண்டும்' என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

இந்த நிலையில் மே முதல் நாளில் செவ்வாய் கிழமை நெடுவாசல், வடகாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நடக்கும் கிராமசபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்பட்டு ஆழ்குழாய் எண்ணெய் கிணறுகள் அகற்றப்பட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 

சார்ந்த செய்திகள்