திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்துக்கட்சி தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பத்தரிகையாளர்கள் நக்கீரன் கோபால், கோவி.லெனின் உட்பட பலர் கோபாலபுரம் இல்லம் வருகை தந்து நலம் விசாரித்தனர்.
இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தமிழ்மாநிலதலைவர் தமிழிசை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம், நடிகர்கள் ராதாரவி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நேரில் வந்து நலம் விசாரித்தனர்.
பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தொடர்புகொண்டு கலைஞரின் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியன் கலைஞரின் நலம் குறித்து நேரில் வந்து விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
‘’கலைஞர் உயிருக்காக மன்றாடவில்லை; அவரிடம் இயற்கை மன்றாடுகிறது. தமிழக மக்கள் நெஞ்சில் கலைஞர் என்றும் நிலைத்திருப்பார்’’
என்று தெரிவித்தார்.