Skip to main content

கூட்டு சதி;  நல்லாசிரியர் விருது பெற்றவர் அதிரடி கைது

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

national level best teacher award Award Ramachandran was arrested in a case of income tax fraud

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவர் வருமான வரி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். 

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக ராமசந்திரன் பணியாற்றி வருகிறார். சிறப்பாக பணியாற்றியதையடுத்து கடந்த ஆண்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் நல்லாசிரியர் விருதும் பெற்றார். இவரது சகோதரர் பஞ்சாட்சரம் டாக்ஸ் இன்ஃபர்மேஷன் நெட்வேர்க் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் வருமான வரி தாக்கல் தொடர்பான விபரங்கள் மற்றும் வரி தாக்கல் செய்யும் பணியினை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

இந்த நிலையில் பஞ்சாட்சரம் தனது நிறுவனத்தின் மூலம் நிறைய பேருக்கு குறைவான கணக்கு காண்பித்து பணத்தை திரும்பப் பெற்று கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 2.84 கோடி வரை முறைகேடாக வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்பப் பெற்று கொடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார் என்பதை கண்டுபிடித்த வருமான வரித்துறையினர் பஞ்சாட்சரம் மீது சிபிஐயிடம் புகாரளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ கடந்தாண்டு அவரை கைது செய்தது. . 

 

இதனையடுத்து பஞ்சாட்சரம் தனது சகோதரர் ராமசந்திரனுக்கு தனது வங்கி கணக்கின் மூலம் ரூ.12 லட்சம் அனுப்பப்பட்டதைக் கண்டுபிடித்த சிபிஐ அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், இது குறித்து ஆசிரியர் ராமசந்திரன்  உரிய விளக்கமளிக்காததால் கூட்டு சதி என்ற பிரிவில் சிபிஐ கைது செய்துள்ளது. இந்த நிலையில் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராமசாந்திரனை பணியிடைநீக்கம் செய்து கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்