நந்தனார் பட்டியல் சமூகம் என்பதால் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என கடந்த பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்த தீட்சிதர்கள் தடுத்ததாகவும், இவர் தெற்கு வீதி வழியாக வரும்போது நந்தி குறுக்கே வந்து தடுதத்தாம். அப்போது கோயில் தெற்கு கோபுர வாயிலுக்கு வெளியே நந்தனார் நின்று சிவனை மனமுருகி பாடலை பாடியுள்ளார். அப்போது தெற்கு வீதி கோவில் சுவர் இடிந்து விழுந்து நந்தனார் கோயிலுக்கு உள்ளே செல்வதற்கு வழிவகை செய்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இவர் 63 நாயன்மார்களில் ஒருவராக திருநாளைப்போவார் எனப்போற்றப்பட்டு வருகிறார். இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன மற்றும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறும்.
இந்நிலையில் ஒவ்வொரு முறையும் தரிசன விழா நடைபெறுவதற்கு முன்பு கோவிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் நந்தனாரின் பட ஊர்வலம் தொன்று தொட்டு காலம் முதல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2025 ஆண்டு மார்கழி மாத சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர் திருவிழா ஜன 12-ஆம் தேதியும், தரிசன விழா 13-ஆம் தேதி நடைபெற்றது. தரிசன விழா நடைபெறுவதற்கு முன்பு நடராஜர் கோவிலை சுற்றியுள்ள முக்கிய தெருக்களில் 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பட ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு நந்தனார் கல்விக் கழகத் தலைவர் கே.ஐ மணிரத்னம் தலைமை தாங்கினார். செயலாளர் திருவாசகம், பொருளாளர் ஜெயச்சந்திரன், உறுப்பினர் கற்பனைச்செல்வம், நந்தனார் கல்வி கழக அட்மினிஸ்ட்ரேட்டிவ் கமிட்டியின் செயலாளர் வினோபா, தலைவர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் இளைய.அன்பழகன், கொத்தவாசல் அன்பழகன், நந்தனார் கல்வி கழக முன்னாள் தலைவர் சங்கரன், காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் செந்தில்குமார், கஜேந்திரன், நந்தனார் பெண்கள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்க.ஜெயராமன் உள்ளிட்ட 1000-த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நந்தனார் பட ஊர்வலம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்திலிருந்து மேல தாளம் முழங்க ஊர்வலமாக வந்து சிதம்பர நகரின் தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி என முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நந்தனார் மடத்தை அடைந்தது.
இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு நந்தனார் கல்விக் கழகத்தின் தலைவர் மணிரத்தினம் 1000-ம் பேருக்கு புடவை மற்றும் வேட்டிகளை வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில் வரும் காலங்களில் இதைவிட சிறப்பாக நந்தனார் பட ஊர்வலத்தை நடத்துவது என்றும் கிராமம்தோறும் நந்தனாரின் புகழை மக்களுக்கு எடுத்துச் சென்று அவர் ஆன்மீகம் மற்றும் நந்தனார் பள்ளியின் கல்விப் பணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தரிசன விழாவின்போது அதிக அளவில் மக்களை திரட்டி ஊர்வலம் நடத்தப்படும் என கூறினார்.