![1](http://image.nakkheeran.in/cdn/farfuture/BG9AQNpuTpT6pgNweakmdemsJCxnKRbznmUKqCmMrbc/1534073816/sites/default/files/2018-08/whatsapp_image_2018-08-12_at_11.14.30.jpeg)
![1](http://image.nakkheeran.in/cdn/farfuture/7SEPrzMOK5oySCqHJoMwTEC2O_kUfZZMyVB3PuSVuI4/1534073816/sites/default/files/2018-08/whatsapp_image_2018-08-12_at_11.14.32.jpeg)
![1](http://image.nakkheeran.in/cdn/farfuture/5v49n9v4JgS8A5d1-apeTpQkOkQOfK-GpmtDrIC4kYk/1534073816/sites/default/files/2018-08/whatsapp_image_2018-08-12_at_11.14.321.jpeg)
![1](http://image.nakkheeran.in/cdn/farfuture/pwykqlj8BGmGE701IewnbClji63Ku1Q9DcsakDDVF8Y/1534073816/sites/default/files/2018-08/whatsapp_image_2018-08-12_at_11.14.33.jpeg)
Published on 12/08/2018 | Edited on 12/08/2018
மெரினாவில் உள்ள திமுக தலைவர் கலைஞர் நினைவிடத்தில் 5வது நாளாக பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு அருகே கடந்த 8ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. கலைஞரின் இறுதி ஊர்வலத்தின் போது லட்சக்கணக்கான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் மெரினாவில் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 5வது நாளான இன்று தொண்டர்களும், பொதுமக்களும், நடிகர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும், கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நக்கீரன் ஆசிரியர் அவர்களும் இன்று மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.