Skip to main content

ஆணி பிடுங்கும் திருவிழா... கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்!!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

தேனி மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் மரங்களில் ஆணி அடிக்க தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆணிகள் அடிக்கப்பட்ட மரங்களின் வளர்ச்சி தடைபட்டு அதன் ஆயுள் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து கடந்த இரண்டு மாதங்களாக மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Nail removing Festival... Resolution at the Gram Sabha meeting

 

ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் தன்னார்வலர்கள் மரங்களிலிருந்து ஆணிகளை அகற்றி வருகின்றனர். இந்த நிலையில்தான் கடந்த 71 வது குடியரசு தின விழாவையொட்டி கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. பல்வேறு ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு மரங்களில் ஆணி அடிப்பதை தடுக்க வலியுறுத்தி தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

இந்த கோரிக்கையை வலுவாகவும் அங்கங்கே உள்ள தன்னார்வத் தொண்டர்கள் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அம்மாபட்டி, ராமசாமிநாயக்கன் பட்டி, பூதிப் புரம், ஊஞ்சம்பட்டி, வடபுதுப்பட்டி, பாலார்பட்டி, காமாட்சிபுரம், பொட்டிபுரம், சிந்தல சேரி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், மேலச்சேரி, நாகையை கவுண்டன்பட்டி, சின்னபுரம், பூசாரி கவுண்டன்பட்டி ஆகிய 15 ஊராட்சிகளில் மரங்களில் ஆணி அடிப்பதற்கு தடை விதித்தும் ஏற்கனவே அடிக்கப்பட்ட ஆணைகளை அப்புறப்படுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Nail removing Festival... Resolution at the Gram Sabha meeting

 

மேலும் கோபாலபுரம் அம்மாபட்டி உள்பட பல்வேறு ஊராட்சிகளில் சாலையோர மரங்களை வெட்ட தடை விதித்தும், புதிதாக மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது என்றும் தீர்மானத்தில்  குறிப்பிடப்பட்டது. இப்படி மரங்களில் அணி அடிப்பதை தடுக்க கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை  கண்டு அப்பகுதியில் உள்ள மக்களும் வரவேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்