ரஜினிகாந்தின் 70-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் அவருடைய ரசிகா்களால் பெரும் விமா்சையாக நேற்று (12-ம் தேதி) கொண்டாடப்பட்டது. குமாி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் தங்கம், கௌரவ தலைவர் அமலன், துணைச் செயலாளர் ஆர்.எஸ் ராஜன், சிறுபான்மை பிாிவு செயலாளர் சதீஷ்பாபு, பத்மனாபபுரம் நகர செயலாளர் ஸ்டைலோ ரெகு, துணை செயலாளர் ஐயப்பன் உட்பட நிா்வாகிகள் சார்பில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம் வழிபாட்டு ஸ்தலங்களில் பிரார்த்தனை செய்து கொண்டாடப்பட்டது. காலையில் சிறப்பு பூஜையும், அதனைத் தொடா்ந்து பல்வேறு ஊர்களில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து நலிவடைந்த ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்.
ரஜினிகாந்த அரசியல் கட்சி தொடங்க இருப்பதன் அறிவிப்புக்கு பிறகு ஆட்டம் பாட்டம் என்று கிராமம், நகரம் என பட்டிதொட்டியெல்லாம் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் விழா ரசிகர்களை பொியளவில் உற்சாகப்படுத்தியிருப்பதுடன், அரசியல் கட்சியினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாகர்கோவில் மாநகராட்சி, பத்மனாபபுரம் நகராட்சி, குளச்சல் நகராட்சி, குழித்துறை நகராட்சியில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா ஒரு வாரமாக கொண்டாடப்பட இருக்கிறார்கள்.
இந்நிலையில் தக்கலை நீதிமன்றம் எதிாில் ஓட்டல் நடத்தி வரும் நாகராஜன் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி தன்னுடைய ஓட்டலில் இன்று காலை டிபன் முதல் மாலை வரை தேநீா் இலவசமாக வழங்கினார். இதையொட்டி வந்த வாடிக்கையாளர்கள் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி சென்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய நாகராஜன், 32 ஆண்டுகளாக ரஜினிகாந்தின் ரசிகராக நான் மட்டுமல்ல எனது குடும்பமும் இருந்து வருகிறது. எனது அண்ணன் நகர ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியாக உள்ளார் . ரஜினி தனது உடல்நிலையை கூட பொிதாகக் கருதாமல் தமிழக மக்களுக்காக சேவை செய்ய வருகிறேன் என்றும், அதற்காக அரசியல் கட்சி தொடங்குகிறேன் என்ற ரஜினியின் அறிவிப்பு ரசிகர்களையும் தாண்டி தமிழ் மக்களை அதிகம் ஈா்த்துள்ளது. அவரின் ஒவ்வொரு பிறந்தநாளும் எங்களுக்கு தீபாவளி. ஆனால் இந்த பிறந்தநாளை நாங்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என சேர்த்து ஓரே பண்டிகையாக கொண்டாடுகிறோம் என்றார்.