Skip to main content

அரசு பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு கத்தி குத்து!  

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

Nagapattinam government bus chennai people injured

 

அரசுப்பேருந்தில் சென்ற சுற்றுலா பயணிகள் மீது மர்ம நபர்கள் கத்தியால் குத்தி மிரட்டியதால் பயணிகள் பதறி அடித்து ஓடியுள்ளனர்.

 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த 15 பேர் சுற்றுலா வந்துள்ளனர். வேளாங்கண்ணியைச் சுற்றிப் பார்த்துவிட்டு இரவு அக்கரைப்பேட்டை வழியே நாகப்பட்டினம் செல்லும் அரசு டவுன் பேருந்தில் சென்றுள்ளனர். டிக்கெட் கொடுக்கும் போது நடத்துநர், பயணி ஒருவரிடம் டிக்கெட்டை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயணிகளுக்கும் நடத்துநருக்கும் இடையே பேருந்துக்குள்ளேயே கடும் தகராறு ஏற்பட்டு நடத்துநரை தாக்கியதாக கூறப்படுகிறது.


அப்போது, அவ்வழியே சென்ற 3 மர்ம நபர்கள் நடத்துநரை தாக்குவதை கண்டு ஆத்திரம் அடைந்து, சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளான மணிரத்தினம், பரமகுரு ஆகியோரை கத்தியால் குத்தினர். இதனைக் கண்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர். படுகாயமடைந்த இரண்டு பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கிராம பொதுமக்கள் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .


இச்சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்