டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த பத்து நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்திவருகின்றனர், போராட்டத்தை தொடர்ந்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது.
டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த மூன்றாம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பத்தாவது நாளை எட்டியுள்ள வேலை நிறுத்த போராட்டத்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2000 விசைப்படகுகள் ஐந்தாயிரம் நாட்டுப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலுக்கானவரியையும்
முற்றிலும் நீக்க வேண்டும் விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் 1800 லிட்டர் மானியடீசலை 4 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. 10 நாட்கள் சென்ற நிலையில் இதுவரை அரசு சார்பாக எவ்விதமான பேச்சிவார்த்தைகளும் நடைபெறாத சூழலில் இதனை அடுத்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இன்று மாவட்டத்தின் பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் நாகை புத்துார் ரவுண்டானா மற்றும் அண்ணாசிலை உள்ளிட்ட இரு வேறு இடங்களில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் அவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். சாலை மறியல் காரணமாக திருவாரூர் நாகை மற்றும் நாகை வேளாங்கண்ணி சாலைகளில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.