மகளிர் விடுதியில் இளம்பெண் மர்ம சாவு
விருதாச்சலம் தாலுகா மதுனை கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகள் இளைய திலகம் (24). கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்னைக்கு வந்த இவர், சூளைமேடு திருவேங்கடம் தெருவில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கி, வேலை தேடி வந்தார். இவருடன் அறையில் தங்கியுள்ள தோழிகள், காலையிலேயே வேலைக்கு சென்று விடுவார்கள். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவரது தோழிகள், மாலையில் விடுதிக்கு திரும்பினர். அப்போது, அறையில் இளைய திலகம் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிந்தது. சூளைமேடு போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.