திருச்சி திருப்பஞ்சலி வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (45). இவர், திருவானைக்காவல் பைபாஸ் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களாகியும் நாகராஜ் வீடு திரும்பிவில்லை. இதனால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அதேவேளையில், புதிதாகக் கட்டப்பட்டுவரும் அந்தக் கட்டடத்தின் முன்பு ஒரு டூவிலர் இருந்ததைக் கண்டு, காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கே நாகராஜ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நாகராஜின் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
வேலைக்குச் சென்ற நாகராஜ், அதே கட்டடத்தில் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறையினர், அவரது மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.