கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் முருகன்குடி, நடராசபுரத்தில் முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் புனரமைக்கப்பட்டு, திருக்குடமுழுக்கு திருநன்னீ்ராட்டு விழா இன்று (13/07/2022) காலை நடைபெற்றது.
தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினர் திருவில்லிப்புத்தூர் செந்தமிழ் வேள்விச் செம்மல் வே.மோகனசுந்தரம் அடிகள் தலைமையில் சிவனடியார்கள் வேள்விச் சாலை அமைத்து, தமிழ் மந்திரங்கள் ஒலிக்க, திருக்குடமுழுக்கு நன்னீராற்றுப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் முருகன்குடி, நடராசபுரத்தில் முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் புனரமைக்கப்பட்டு, திருக்குட முழுக்கு திருநன்னீராட்டு விழா இன்று (13/07/2022) காலை நடைபெற்றது. தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினர் திருவில்லிப்புத்தூர் செந்தமிழ் வேள்விச் செம்மல் வே.மோகனசுந்தரம் அடிகள் தலைமையில் சிவனடியார்கள் வேள்விச் சாலை அமைத்து, தமிழ் மந்திரங்கள் ஒலிக்க, திருக்குட முழுக்கு நன்னீராற்றுப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கோயில் விமான கலசங்களுக்கு நன்னீர் ஊற்றும் போது மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆன்மீக அன்பர்கள், மாரியம்மன் அருளைப் பெறுவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். சின்னஞ்சிறு முருகன்குடி சிற்றூரில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றதை பலரும் பாராட்டி சென்றனர். தெய்வத் தமிழ்ப்பேரவை சார்பில் முருகன்குடி கனரா வங்கி நகை மதிப்பீட்டாளர் மு.இரா.இரமேசு, மகேசுவரி இரமேசு பங்கேற்று பொது மக்களுக்கு உணவு வழங்கினர். நிகழ்வினை தெய்வத் தமிழ் பேரவையினரும், முருகன்குடி அருள்தரும் முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொது மக்கள் ஒருங்கிணைத்து நடத்தினர்.
தெய்வத் தமிழ்ப் பேரவையின் தொடர் முயற்சியால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 06/02/2022 அன்று திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலம்) தமிழில் குடமுழுக்கு மதுரை உயர்நீதிமன்ற ஆணைப்படி சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இன்று சிற்றூர் மாரியம்மன் கோவிலில் தமிழ் மந்திரங்கள் ஒலிக்க திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது.