Skip to main content

ஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019


ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த தடய அறிவியல் நிபுணர், சிபிசிஐடி காவல்துறை அளித்த தடயங்களில் படிந்திருந்தது கோகுல்ராஜின் ரத்தம்தான் என்பதை உறுதி செய்து, நாமக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 18, 2019) சாட்சியம் அளித்தார்.


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜின் சடலம்  தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கை நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோகுல்ராஜை திட்டமிட்டு கொலை செய்ததாக, சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

murder case


கைதானவர்களில் இருவர் தவிர, மற்ற 15 பேரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வரும் சாட்சிகள் விசாரணையின்போது ஆஜராகி வருகின்றனர். நீதிபதி இளவழகன் முன்னிலையில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.


இந்நிலையில், அரசுத்தரப்பு சாட்சிகளிடம் இன்று (பிப்ரவரி 18, 2019) மீண்டும் விசாரணை நடந்தது. முதல் சாட்சியாக திருவள்ளூர் மாவட்ட தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் நளினா ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவருடைய சாட்சியம்.


''கோகுல்ராஜின் சடலத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக டிரவுசர் (பேன்ட்) (1), சட்டை (2), பணியன் (3), ஜட்டி (4), கிழிந்த நிலையில் கிடந்த பணியன் துண்டுகள் சில  (5), சடலம் கிடந்த இடத்தில் ரத்தம் தோய்ந்திருந்த சில கற்கள் (6) ஆகிய ஆறு தடயங்களை காவல்துறையினர் தடய அறிவியல் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவற்றில் 3, 4, 5 ஆகிய மூன்று இனங்களில் படிந்திருந்த ரத்தக்கறைகள் அவற்றின் தன்மையை இழந்து இருந்தன.

 

murder case


மேலும், 1 மற்றும் 6 ஆகிய இனங்களில் படிந்திருந்த ரத்தக்கறைகள் மனித இனத்தைச் சார்ந்ததுதான் என்றாலும், அவை என்ன வகை என்று எங்களால் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இனம் 2ல் (சட்டை) படிந்திருந்த ரத்தக்கறை, மனித ரத்தம்தான். அது, 'ஓ குரூப்' வகையைச் சார்ந்தது எனவும் கண்டறியப்பட்டது. இந்த வகையும், இந்த வழக்கில் தொடர்புடைய இறந்த நபரின் ரத்த மாதிரியும் இரண்டும் 'ஓ குரூப்' என்ற ஒரே வகையைச் சேர்ந்தது என்றும் ஆய்வில் தெரிய வந்தது,'' என்றார் நளினா.

 


இதையடுத்து ஓமலூரைச் சேர்ந்த ரங்கநாதன், பாஸ்கரன், செல்வமணி என்ற பெண், மாதேஷ் ஆகியோரும் சாட்சியம் அளித்தனர். இவர்களில் அரசுத்தரப்பு சாட்சியமான மாதேஷ் மட்டும் பிறழ் சாட்சியம் ஆனார். அவரிடம் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி குறுக்கு விசாரணை நடத்தினார். இத்துடன் இன்றைய சாட்சிகள் விசாரணை முடிந்தது. இதையடுத்து சாட்சிகள் விசாரணையை நாளை மறுதினத்திற்கு (பிப்ரவரி 20ம் தேதி) ஒத்திவைத்தார் நீதிபதி இளவழகன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பா.ம.க எம்.எல்.ஏ

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
pmk MLA fell on his feet and apologized

ஓமலூரில் பள்ளி மாணவ மாணவிகள் முன்பு தரையில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏவால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாமக எம்எல்ஏ அருள் கலந்து கொண்டார். அதன் பிறகு மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி ராஜ் என்பவர் தங்கள் தரப்பு நிர்வாகிகளை நிகழ்ச்சியில் பேசவிடாமல் தடுத்ததாக கூறினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

vck ad

திடீரென பாமக எம்எல்ஏ அருள், திமுக உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பேசட்டும் என தெரிவித்ததோடு நடந்த நிகழ்வுக்காக மன்னிப்பு கேட்கிறேன் என அங்கிருந்த மாணவ மாணவிகள் முன்பு தரையில் விழுந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். 'நான் அரசியல் பண்ண விரும்பல. நான் கட்சிக்காரனாக பேசவில்லை. உங்களை அசிங்கப்படுத்தி, அவமரியாதை கொடுத்திருந்தால் என்னை மன்னிச்சிருங்க' என்று கீழே விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

ஏமாற்றிய காதல் கணவன்; சாமியானா பந்தல் போட்டு 86 நாட்களாகத் தொடரும் கர்ப்பிணிப் பெண்ணின் போராட்டம்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

A cheating husband; 86 days pregnant woman's protest at Samiana Panthal

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கர்ப்பிணி பெண் ஒருவர் 86 நாளாக கணவரின் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் வேலக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். மோகன்ராஜ் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தபொழுது பவித்ரா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. காதல் திருமணத்திற்குப் பிறகு ஐந்து மாதம் கழித்து சொந்த ஊரான வேலக்கவுண்டனூருக்கு சென்ற மோகன்ராஜ், காதல் மனைவியான பவித்ராவின் அழைப்புகளைத் தவிர்த்து வந்துள்ளார்.

 

காதல் கணவனிடம் தன்னைச் சேர்த்து வைக்கும்படி மோகன்ராஜின் வீட்டுக்கே சென்றுள்ளார் பவித்ரா. ஆனால் மோகன்ராஜின் பெற்றோர் கர்ப்பிணி பெண்ணான பவித்ராவை விரட்டியடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பவித்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ஆஜரான மோகன்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வெளியே வந்த மோகன்ராஜ், வேலக்கவுண்டனூரில் உள்ள வீட்டிலிருந்து குடும்பத்தினருடன்  மொத்தமாக வெளியேறிவிட்டார். தன்னைக் காதல் கணவருடன் சேர்த்து வைக்கும்படி பவித்ரா அவருடைய குடும்பத்துடன் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மோகன்ராஜ் வீட்டிற்கு முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு போராட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.