ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் பிப்ரவரி 15-ல் சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் மாயமானார். இந்நிலையில் 6-ம் தேதி திருப்பதியில் அவரை ஆந்திர போலீசார் மீட்டனர். இதனிடையே இசை என்கிற ராஜேஸ்வரி என்கிற பெண் அளித்த பாலியல் புகாரில் முருகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை முன்பு ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்ட அவர், மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முகிலனை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் முகிலன் போலிசாரிடம் என்னை இரவில் தங்க வைத்து விட்டு பகலில் ஆஜர் படுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் போலிசாரோ இரவோடு இரவாக பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட முகிலன், நள்ளிரவில் கரூர் மாவட்டக் குற்றவியல் நீதிமன்ற எண் 2ன் நீதிபதி விஜய கார்த்திக் முன்னிலையில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் முகிலன் அடைக்கப்பட்டார்.
இதனிடையே சென்னை நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக நள்ளிரவில் தன்னை கரூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தியுள்ளதாக முகிலன் முழக்கமிட்டார். எந்த உண்மையும் வெளிவரக்கூடாது என காவல்துறை நினைக்கிறார்கள் என்று கதறினார்.
அதே நேரத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முகிலன் மனைவி பூங்கொடி, இருட்டு அறையில் அடைத்து முகிலனை சித்ரவதை செய்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.