கரோனா வைரஸ் பாதிப்பால் பெரியளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முககவசம், கிருமிநாசினி உட்பட சல அடிப்படை தேவைகள் இல்லாமலும், அதற்கு நிதியில்லாமலும் தவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினங்கள் தங்களது தொகுதி நிதியின் ஒரு பகுதியை மருத்துவ பணிகளுக்காக ஒதுக்கியுள்ளனர்.
அதன்படி ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர்களுள் ஒருவருமான மருத்துவர் விஷ்ணுபிரசாத் தனது தொகுதி நிதியில் இருந்து 60 லட்ச ரூபாயை மருத்தவ பணிக்காக ஒதுக்கி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த 60 லட்சத்தை ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குள் வரும் ஆரணி, வந்தவாசி, போளுர், செய்யார், விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் வரும் செஞ்சி, மயிலம் என 6 சட்டமன்ற தொகுதிக்கு தலா 10 லட்சம் என்கிற கணக்கில் 60 லட்சம் ஒதுக்கியுள்ளார். இந்த 6 சட்டமன்ற தொகுதியிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடிப்படை மருத்தவ உபகரணங்கள் தேவைக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுள்ளார்.