சர்வதேச அன்னையர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " 'தாய்' மொழி, 'தாய்' நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு! எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்! மகளிர் நலத்துடன்- அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
'தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு!
— M.K.Stalin (@mkstalin) May 9, 2021
எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் #MothersDay நல்வாழ்த்துகள்!
மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்! pic.twitter.com/7X88fp1VDL
மேலும், தனது தாயார் தயாளு அம்மாளை மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று சந்தித்துப் பூங்கொத்துக் கொடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். அந்த புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.