Published on 10/01/2023 | Edited on 10/01/2023
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று (09.01.2023) ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிகழ்வில் அரசு கொடுத்திருந்த உரையில் சில வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக முதல்வர் உரையாற்றிக்கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் வெளியேறியதும் சர்ச்சையானது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ''எந்த மொழியையும் கற்பது என்பது தவறில்லை; அது அந்த மக்களுடன் இணைந்து பணியாற்ற உதவும்; இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் இந்தியாவில் அதிக மக்கள் இந்தியைப் பேசுவதால் இந்தியைக் கற்றுக் கொள்வது பயன்படும்'' எனப் பேசியுள்ளார்.