திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில், வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, அதிகாரிகள் மூலம் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும். இந்தப் பணி, கரோனா காலத்தால் தொய்வடைந்த நிலையில், பொதுமக்கள் கொண்டுவரக்கூடிய மனுக்கள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போட்டுவிட்டுச் செல்ல வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் 11 மாதங்களுக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் குறைதீர் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் இருந்து 338 மனுக்களைப் பெற்றார். அதில், 21 மனுக்கள் குடும்ப அட்டை வழங்கக் கோரியும் 71 மனுக்கள் நலத்திட்ட உதவிகள் வேண்டியும் இருந்தன. இன்னும் பல்வேறு பணிகள் குறித்த மனுக்களையும் மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார். மேலும், நான்கு நபர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.