இன்று முதல் தமிழக மற்றும் புதுச்சேரியில் மீண்டும் படிப்படியாக 31ஆம் தேதி வரை வெப்பநிலை உயரக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். நாளை முதல் 31ஆம் தேதி வரை வெப்பநிலை புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக இருக்கும். சென்னையைப் பொறுத்தவரை 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரித்தாலும் தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.