சேலத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்த செவிலிய மாணவிகள் மயக்கம் வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் எஸ்பிசி செவிலியர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் விடுதியில் தங்கி பல மாணவிகள் செவிலியர் படிப்பு மற்றும் பயிற்சி பெற்று வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதியில் உணவருந்திய மாணவிகள் 50 க்கு மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மாணவிகள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மாணவிகள் தங்கியிருந்த விடுதியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது மாணவிகள் குடித்த குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு உணவுபாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. செவிலியர் மாணவிகள் ஒரே நேரத்தில் 50 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.