Skip to main content

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

More than 2,000 Sivanadiars struggle

 

சிதம்பரம் தில்லை நடராஜா, தில்லை காளி சாமிகள் பற்றி  யூடியூப் புரூடஸ் எனும் யூடியூப் சேனலில் ஆபாசமாக அவதூறாகவும் பதிவு செய்த சம்பவத்தை கண்டித்தும் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரத்தில் சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில் இதுவரை தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் இதுகுறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை இல்லையெனத் தமிழக அரசைக் கண்டித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்களை எழுப்பினார்கள். இந்நிகழ்வில் தேவார சித்தர், திருக்கழுக்குன்ற தாமோதரன் சிவனடியார், திருவாரூர் நடராஜன், விஎச்பி மாநிலச் செயலாளர் ஞானகுரு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

 

ஆர்ப்பாட்டத்திற்கு வந்த சிவனடியார்கள் அனைவருக்கும் காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவும் ஏற்பாடு செய்து வழங்கினார்கள். முன்னதாகச் சிதம்பரத்திற்கு வந்த சிவனடியார்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று அங்கு  மேளதாள வாத்தியங்கள் முழங்க நடனம் ஆடினார்கள். பின்னர் நடராஜர் கோவில் கனக சபைக்குச் சென்று தேவாரம் பாடி வழிபட்டனர். சிதம்பரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்று கூடியதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்