ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளா வந்த நபர் ஒருவருக்கு குரங்கு அம்மையின் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டுமுதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து கேரளா வந்த நபர் ஒருவருக்கு குரங்கு அம்மையின் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா தெரிவித்துள்ளார். அறிகுறி தென்படும் நபரின் மாதிரியின் முடிவுகளை புனே வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இன்று மாலைக்குள் முடிவு தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.