காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடை வேண்டும் தமிழ் கலை பண்பாட்டு பேரவை சார்பாக பாரதிராஜா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பாரதிராஜா, சீமான், கௌதமன், தமிமுன் அன்சாரி மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக பாரதிராஜா, சீமான், கௌதமன், கருணாஸ், தனியரசு மற்றும் பலர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் அவர்கள் கூறுகையில்,
நேற்று நாங்கள் அறவழியிலேயே சென்றோம் ஆனால் எங்கோ ஓர் வன்முறை நடந்ததை வைத்து ஒட்டுமொத்த போராட்டத்தையும் வன்முறை என சொல்லக்கூடாது, நேற்று நடந்த வன்முறை ஒரு வினைக்கான எதிர்வினையே தவிர வன்முறையை உருவாக்கினோம் என்பதை ஏற்கொள்ளமாட்டோம், இயக்குனர் வெற்றிமாறன், களஞ்சியம் போன்றோர் தாக்கப்பட்டுள்ளனர் அது வன்முறையாக தெரியவில்லையா?
![bharathiraja](http://image.nakkheeran.in/cdn/farfuture/6y-hR1gjwyKCS8v95o9CaNFpRCnQ1NJ3m-7L0yXni7g/1533347628/sites/default/files/inline-images/IMG_20180411_145336.jpg)
நாளையும் இதே போல் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கிறோம். மோடியின் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டவிருக்கிறோம், அதுபோல் வரும் 20-ஆம் தேதியும் தமிழகத்தில் ஐ.பி.எல் நடப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணவிருக்கிறோம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இது தொடரும் .
ஆந்திராவில் சீருடையில் போலீசார் தமிழர்களை சுட்டுக்கொன்றபோது ரஜினிக்கு வன்முறையாக தெரியவில்லையா, கர்நாடகாவில் தமிழர்களை தாக்கியத்திற்கு அவர் குரல் கொடுத்தாரா? போராட்டக்களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் தெரியும் எங்களின் வலி என ரஜினியின் ட்விட்டருக்கு கண்டனத்துடன் பதிலளித்தனர்.
மேலும் தமிழ்நாட்டிற்கென உருவாக்கப்பட்டுள்ள கொடியுடன் இனி போராடப் போகிறோம் அது பிரிவிணைக்கான நோக்கமால்ல, அதேபோல் கட்சிப்பாகுபாடுகளை தாண்டியதாக எங்களின் போராட்டமானது இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.