Skip to main content

ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல: ராஜேந்திர பாலாஜி

Published on 20/02/2018 | Edited on 20/02/2018
raj


தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல, அவர் நாட்டின் பிரதமர்'' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் நேற்று இரவு நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

ரஜினி, கமல் கட்சி ஆரம்பிப்பதால் அதிமுகவிற்கு ஒரு சதவீதம் கூட பாதிப்பில்லை. கமல்ஹாசன் யாரை எதிர்த்து அரசியலில் ஈடுபடுகிறார் என்பதே தெரியவில்லை. அவர் வந்த வேகத்தில் அதை விட்டு விட்டு திரும்ப ஓடிவிடுவார்.

ஏற்கனவே விஷ்வரூபம் பட விவகாரத்தில் நாட்டை விட்டு ஓடுவேன் என்றார். ரஜினி ஒரு நல்ல மனிதர். அவர் அரசியலில் ஈடுபடுவதை விட எப்பொழுதும் போல் சினிமாவில் நடிப்பதே அவருக்கு நல்லது. அரசியிலில் இறங்கி அவரது பெயரை கெடுக்க வேண்டாம். கமலஹாசன் பெயரை கெடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.

தமிழக அரசுக்கு மோடி ஆலோசனை சொல்கிறார் என்கிறார்கள். தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல. நாட்டின் பிரதமர். அதனால் அவர் ஆலோசனை சொல்கிறார் என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்