Skip to main content

போர்தொடுத்து பிற நாடுகளை வெல்வதை விட, மனங்களை வெல்ல வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!

Published on 12/04/2018 | Edited on 12/04/2018
modi

போர்தொடுத்து பிற நாடுகளை வெல்வதை விட, மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் நேற்று தொடங்கிய இந்திய ராணுவ கண்காட்சி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று தொடங்கினாலும், அதன் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிட்டு வருகிறார்.

ராணுவ கண்காட்சியை முறைப்படி துவங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, காலை வணக்கம் என்று தமிழில் பேசி தனது உரையைத் தொடங்கினார்.

இந்த ராணுவ தளவாட கண்காட்சிக்கு வருகை தந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். முதன்முறையாக இந்திய நாடுகளில் தயார் செய்யப்பட்ட ராணுவ தளவாட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தற்போது தொடங்கியிருப்பது 10வது ராணுவ கண்காட்சியாகும். 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள் 125 வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

இந்திய நாகரீகத்தை வர்த்தகம் மற்றும் கல்வியில் வாயிலாக ஏற்படுத்திய சோழர்களின் மண்ணில் நின்று பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். உலகுக்கு அகிம்சையைப் போதித்த நாடு நமது நாடு. போர்தொடுத்த பிற நாடுகளை வெல்வதை விட, மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது. அமைதியான வழியில் ஆட்சி செய்யும் போது, ஆயுதங்கள் எதற்கு என கேள்வி எழுலாம். அமைதியை நிலைநாட்டவும், எதிரிகளுக்கு அடையாளம் காணவும் ஆயுதங்கள் தேவை.

அமைதியை விரும்பும் அதேநேரத்தில் நாட்டு மக்களுக்காக எல்லையில் ராணுவம் தனது பங்களிப்பை வழங்குகிறது. நாம் ராணுவ கொள்முதல் செய்வதைதாண்டி நம்மிடம் கொள்முதல் செய்யவேண்டும்.

வாஜ்பாய் ஆட்சியின் போதுதான் ராணுவத்தில் தனியார் பங்களிப்பு தொடங்கிவைக்கப்பட்டது. வேகமாக வளர விரும்புகிறேன். ஆனால் குறுக்கு வழியில் வளர விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்