Published on 27/12/2021 | Edited on 27/12/2021
இன்று காலை 11.30மணியளவில் திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தன் தொகுதியைச் சேர்ந்த முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டோர் என 100 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான சான்றிதழ்களையும், 19 திருநங்கைகள் உள்ளிட்ட 119 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அந்த தொகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவியர் 171 பேருக்கு ராயப்பேட்டை எம்.எஸ் மஹாலில் கல்வி உதவித்தொகையாக ரூ.20 லட்சம் ரூபாய் வழங்கினார். முன்னதாக இன்று காலை 11.15 மணியளவில் திருவல்லிக்கேணி முத்தையா தோட்டம் பகுதியில் நகர்ப்புற சுகாதார மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.