மு.க.முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
தந்தை மு.க.முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி அவரது இரண்டாவது மனைவியின் மகள் ஷீபா ராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முத்துவின் முதல் மனைவி மகன் அறிவுநிதி, தன்னையும், தன் தாயையும் முத்துவை சந்திக்க விடாமல் தடுப்பதாகவும், ரவுடிகளை வைத்து மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். 2009 முதல் 2014 வரை என் தந்தையை சந்திக்க விடாமல் தடுத்ததாகவும். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு திருவாரூரில் மாவட்டத்தில் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தந்தையை அறிவுநிதி சட்டவிரோதமாக சிறை வைத்துள்ளதாகவும், அவரை மீட்க கோரியும் காவல் துறையினருக்கு அளித்த புகார் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஷீபா ராணியின் மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.