Published on 31/01/2021 | Edited on 31/01/2021

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'போலியோ சொட்டு மருந்து முகாம்' இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் 43,051 மையங்களில் இன்றைய தினம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
சென்னை பசுமை வழிசாலையில் உள்ள தனது இல்லத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார். இன்று மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனை, சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது போலியோ சொட்டு மருந்து முகாம் நிறைவடைந்ததுள்ளது.