Skip to main content

"அம்மா... அம்மா... என்று நடிக்கிறார்களே; அதிமுகவே என் பேச்சைத்தான் கேட்கிறது!" - மு.க.ஸ்டாலின் உரை!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

dmk stalin

 

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தீவிரப் பிரச்சாரத்தை திமுக முன்னெடுத்து வருகிற நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன், காணொலி வாயிலான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,

 

" 'கஜா' புயலாக இருந்தாலும் சரி, நீலகிரி நிலச்சரிவாக இருந்தாலும் சரி, கடலூர் வெள்ளமாக இருந்தாலும் சரி, முதலில் மக்களின் கண்ணீரைத் துடைக்கு கை என் கைதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு தற்பொழுது வரை பேசிக்கொண்டிருப்பது நான் மட்டும் தான். அம்மா... அம்மா... என்று நடிக்கிறார்களே.  ஊழல் முறைகேடு காரணமாக ஆட்சியாளர்கள் உள்ளே சென்றால், அதற்கு திமுகதான் காரணம். இந்திக்கு ஆதரவாக அமித்ஷா கருத்துச் சொன்னபோதும், ரயில்வே அதிகாரிகள் இந்தியில்தான் பேசவேண்டும் என்ற அறிவிப்பு வந்தபோதும் அதற்கு எதிராகப் போராடி வென்றது முதல், கரோனா காலத்தில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யவேண்டும், கரோனா நேரத்தில் 10-ஆம் வகுப்புக்கு தேர்வு வேண்டாம் எனச் சொன்னது வரை, ஏன்? குப்பைகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதிலும் கூட அதிமுக அரசு என் பேச்சைத்தான் கேட்டது. 

 

எனவே, ஸ்டாலின் என்ன செய்துகொண்டிருக்கிறார் எனக் கேட்க முதல்வருக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ தகுதியில்லை. மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டது தி.மு.க. தான். 10 ஆண்டுகால ஆட்சிப் பள்ளத்தைச் சரிசெய்யும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்