Skip to main content

கோவிலில் மொட்டை அடிப்போருக்கு ஊக்கத்தொகை... முதல்வர் தொடங்கி வைத்தார்! (படங்கள்)

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு முன்னெடுத்து வருகிறார். அன்னைத் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், கோவிலில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் தற்பொழுது தொடங்கிவைத்துள்ளார்.

 

சென்னை வேப்பேரியில் இந்த திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மொத்தம் 349 கோவில்களில் உள்ள 1,744 பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக 5,000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைத் துவக்கிவைத்த முதல்வர் அரசி, பருப்பு, தேயிலை உள்ளிட்ட 14 பொருட்கள் கொண்ட மளிகை தொகுப்பையும் பணியாளர்களுக்கு வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்