Skip to main content

“வெறுப்பில் 'ஷோ' காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி... ஸ்மார்ட் சிட்டியில் சொல்லமுடியா முறைகேடு...'' - மு.க. ஸ்டாலின் பேட்டி!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

படங்கள்: அசோக் குமார், குமரேஷ் 

 

MK Stalin interview!

 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த நான்கு தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் வெள்ளச் சேதங்களிலிருந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

chennai

 

இன்று (09.11.2021) வில்லிவாக்கத்தில் மழைநீர் தேங்கிய இடங்களில் ஆய்வுசெய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் பல இடங்களில் அதிகாரிகளே சென்று பார்வையிடவில்லை என மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். மூன்று நாட்களாகியும் நீர் வடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதிமுக அரசு வந்ததற்குப் பின்தான் எங்கெங்கெல்லாம் தாழ்வான பகுதி உள்ளதோ அதையெல்லாம் கண்டறிந்து தேங்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டோம்'' என்றார்.

 

MK Stalin interview!

 

இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்குத் தமிழ்நாடு முதல்வர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''தேர்தல் தோல்வி காரணமாக 'ஷோ' காட்டிவிட்டு வெறுப்பில் பொய்க் குற்றச்சாட்டு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஸ்மார்ட் சிட்டி, மழைநீர் வடிகால் திட்டங்களில் சொல்ல முடியாத அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. மழைக்காலம் முடியும்வரை அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்படும். மெட்ரோ பணி நடக்கும் இடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்