Published on 14/11/2019 | Edited on 14/11/2019
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதாக கல்லூரி விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதில் இருந்து தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதா என்ற விவாதங்களும், அதுகுறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளது உண்மைதான். தமிழகத்தில் உருவாகியுள்ள அந்த அரசியல் வெற்றிடத்தை ரஜினிதான் நிரப்புவார் என தெரிவித்தார்.