
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன் திருமண ஏற்பாடு செய்து வந்தார். சத்தியமங்கலத்தை சேர்ந்த ரத்தினசாமி - தங்கமணி ஆகியோரின் மகள் சந்தியாவை திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயம் முடிந்த நிலையில் வருகிற 12ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் மணப்பெண் சந்தியா திடீரென கடந்த 1ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோபிச்செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மணப்பெண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரு கிராமத்தில் மணப்பெண் சந்தியா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் சந்தியாவை அழைத்துச்சென்று இன்று மாலை 6.30க்கு கோபிச்செட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.