திருவண்ணாமலை மாவட்டம் மலைக் கிராமம் ஒன்றில் சரியான சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவர்களின் உடலை டோலி கட்டித் தூக்கிச் செல்லும் அவலம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைப் பகுதியில் வாழும் கிராம மக்களுக்கு சரியான சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களின் உடல்களை டோலி கட்டித் தூக்கிச் செல்லப்படும் அவலம் நீடித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் டோலி கட்டித் தூக்கிச் செல்லப்பட்டது தொடர்பான செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதே மலைப் பகுதியில் சீங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜன் என்பவரின் மனைவி சுசீலா என்பவர் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் சாலை வசதி இல்லாததால் மலையடிவாரத்திலேயே நிற்க, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் டோலி கட்டி உடலைத் தூக்கிச் சென்றனர்.