Skip to main content

அமைச்சரவை பொறுப்புகளில் திடீர் மாற்றம்... அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

Published on 12/01/2022 | Edited on 13/01/2022

 

Minor change in cabinet responsibilities .. Government of Tamil Nadu has issued a notice!

 

தமிழக அரசின் மூன்று துறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தொழில்துறை அமைச்சர் வசம் இருந்த சக்கரை ஆலைகள் இனி உழவர் நலத்துறை  அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. போக்குவரத்துத்துறை அமைச்சர் வசம் இருந்த விமான போக்குவரத்து தொழில்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்  சிறுபான்மை நலத்துறையிடம் இருந்த அயலக பணியாளர் கழகம் தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் தமிழக அரசு 'இயற்கை வளத்துறை' என்ற புதிய பிரிவை உருவாக்கியுள்ளது. புவியியல், சுங்கத்துறை இயக்குநரகம், கனிம வள நிறுவனம் ஆகியவை புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 'இயற்கை வளத்துறை' கீழ் வரும் எனவும், தற்பொழுது நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் துரைமுருகன் இந்த இயற்கை வளத்துறையை கவனிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

   

சார்ந்த செய்திகள்