Published on 05/03/2019 | Edited on 05/03/2019


விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருவெண்ணைநல்லூர் - ஏனாதிமங்கலம் சாலையில் மீன்களை ஏற்றிச் சென்ற மினிலாரி ஒன்று சாலையோர தடுப்பு சுவற்றில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வியாபாரிகள் பத்து பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் சாலையோரம் கொட்டிக்கிடந்த மீன்களை அப்பகுதி மக்கள் அள்ளிச் சென்றனர்.