கொரோனா வைரஸ் தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது "கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை தர ஆறு பிரத்யேக அறைகள் தயார் நிலையில் உள்ளன.
அதேபோல் 26,000 எண்ணிக்கையில் 3 அடுக்கு முகக் கவசங்கள் தயாராக உள்ளன. சீனாவில் இருந்து வந்த பெண்ணை பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் அறிகுறி ஏதும் இல்லை. சீனாவில் இருந்து வரும் பயணிகளை தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை தரப்படும். கொரோனா வைரஸ் உள்ளதா என புனே ஆய்வகத்தில் சளி மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். விலங்குகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் செல்லப் பிராணிகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் விரைவில் தடுப்பு மருந்துகள் வரும்; யாரும் பீதியடைய வேண்டாம். இந்த வைரஸ் தொடர்பாக உலகம் முழுவதும் தீவிர ஆராய்ச்சி நடக்கிறது. எல்லா சளி, காய்ச்சல் பாதிப்பை கொரோனா வைரஸ் தாக்குதல் என கூற முடியாது. தமிழகத்தை பொறுத்த வரை கொரோனா பாதிப்பு உள்ளதாக யாரும் அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து தகுந்த அறிவுரை வந்தால் பின்பற்றப்படும்." இவ்வாறு டீன் ஜெயந்தி கூறினார்.