நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான பி.தங்கமணி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
செந்தில்பாலாஜி ஏன்? அங்கு அவ்வளவு வேகமாக இருக்கிறார் என்று சொன்னால், எப்படியிருந்தாலும் டி.டி.வி தினகரன் உள்ளே போய்விடுவார், தான் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார். செந்தில்பாலாஜி இப்பொதுகூட மத்திய அரசில் சிலரை தொடர்பு கொண்டு என்னை முதல்வர் ஆக்குங்கள் என்று சொன்னாரா இல்லையா? அதோபோல் சென்னையில் இருக்கிற ஒரு மத்திய அரசை சார்ந்த ஒருவருடன் தொடர்பு கொண்டு என்னை முதலமைச்சர் ஆக்குங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாரா இல்லையா? எப்பொழுது தினகரன் உள்ளே போவார் நான் முதலமைச்சர் ஆவோம் என்று பார்த்துக் கொண்டிருப்பவர் தான் இந்த செந்தில்பாலாஜி இதை நான் ஆதாரத்தோடு சொல்கின்றேன்.
இந்த செய்தியை வெளியிடுங்கள். இதற்கு அவர் கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அங்கே டி.டி.வி தினகரனை எதிர்த்து யாரும் எவரும் பேசமுடியாததற்கு ஒரே ஒரு உதாரணம்.
இப்பொழுது சமீப காலமாக தங்கதமிழ்ச்செல்வனின் பேட்டி வெளிவரவில்லை. ஏன் என்று சொன்னால் தங்கதமிழ்ச்செல்வனை அழைத்து நீங்கள் பேட்டி கொடுப்பதை அதிக அளவில் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புகிறார்கள். ஊழியர் கூட்டத்தில் நீங்கள் பேசும்போது அதிகமாக கை தட்டுகிறார்கள். இனி நீங்கள் பேட்டி அளிக்கக்கூடாது. அதிகமாக பேசக்கூடாது என்று அவருக்கு தடை விதித்துள்ளார்கள் என்று சொன்னால், அம்மா அவர்களால் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். அவரை பேசக்கூடாது என்று சொன்னால், அந்த இயக்கம் எப்படிப்பட்ட இயக்கமாக இருக்கும். தான்தோன்றித் தனமாக எப்பயாவது பதவிக்கு வரவேண்டும் என்ற வெறியில் தினகரன் எதையாவது கூறிக் கொண்டு இருக்கிறார்.
ஆஞ்சநேயர் கோயிலில் என்னை சத்தியம் செய்ய சொன்னவர் செந்தில்பாலாஜி. இவர் முதலமைச்சர் ஆவதற்கு யாரிடம் பேசினார் என்பதை சொல்ல தயாராக உள்ளேன். அவர் கூறுவது உண்மை இல்லை என்றால், இதே ஆஞ்சநேயர் கோயிலில் நான் கூறியது தவறு என்று செந்தில்பாலாஜி சத்தியம் செய்து கூறட்டும். இவ்வாறு பேசினார்.